உஷார்!!! DeepFake ஆபத்து…

Dhinesh Pandian
1 min readApr 20, 2020

கொரோனாவால் பொதுமக்கள் வீட்டிற்க்குள் முடங்கி இருக்கும் நிலையில்.பலரும் தங்கள் நேரத்தை சமூகவலைதளங்களிலும் , ஆன்லைன் விளையாட்டுகளிலும் செலவிடுகின்றனர். பலர் தங்கள் திறமைகளை சமூகவளைதளங்களில் பகிர்ந்துவரும் நிலையில் பலர் தங்கள் புகைப்படங்களை Challenge என்ற முறையில் சமூகவளைதளங்களில் பகிர்ந்துவந்துள்ளனர்.

தற்போது உள்ள சூழ்நிலையில் DeepFake என்ற ஆன்லைன் பயன்பாட்டு செயலி கொண்டு ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்ற முடியும் என சைபர் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் சமூகவளைதளங்களில் Challenge என்று பகிரப்படும் புகைப்படங்கள் என பலரும் கூறுகின்றனர்.

AI எனப்படும் Artificial Intelligence மூலம் புகைப்படங்களை எளிதில் தங்கள் வசதிக்கேற்ப DeepFake பயன்பாட்டாளர்கள் மாற்றிக்கொள்ளமுடியும் என சைபர் வல்லுனர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.இப்படி DeepFake பயன்படுத்தும் சில Hackerகள் தங்களால் மாற்றியமைக்கப்படும் Photoக்கள் மற்றும் Videoக்களின் பதிவுகளுடன் சிலர் பணம்பறிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். இவை பெரும்பாலும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை அதிகம் பகிரும் சிலருக்கு நடக்கின்றன.

இதை கண்டறிய மகாராஷ்டிரா சைபர் பிரிவு தனிப்படை அமைத்துள்ளது. மேலும் சைபர் வல்லுனர்கள் தங்களால் முடிந்தவரை பொதுமக்களுக்கு இந்த DeepFake பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

இதேபோன்று ஒரு சில Hackers ஆபாச வலைத்தளம் வழியாக ஆபாச படங்களை பார்ப்பவர்களின் மொபைல்போன்களை Hack செய்து உங்களை உங்களுக்கே தெரியாமல் கண்காணித்தும் அதை Record செய்தும் உங்கள் மொபைல் தகவல்களை திருடியும் பலரையும் Hackerகள் மிரட்டி தேவைக்கேற்ப பணம்பறித்து வருகின்றனர்.

இதில் இருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தங்கள் புகைப்படங்களை சமூகவளைதளங்களில் பகிர்வதை தவிர்க்கவும்.

#PhotoUploader #CyberSecurity #Awareness #BeSafe

--

--

Dhinesh Pandian

Healthcare Intelligence | Healthcare Analytics | Cyber Law | Data security